கரூர்ல கடந்த ஆண்டு எங்க வீட்ட வாடகைக்கு விடும்போது முதல் மாடியில் இருக்கும் வீட்டுக்கு ஒரு இசுலாமிய குடும்பம் குடி வந்தாங்க. மேல்மாடி ல முஸ்லீம்க்கு விட்டுட்டீங்க கீழ் வீட்டுக்கு வர்றதுக்கு யாரா இருந்தாலும் யோசிப்பாங்களேன்னு புரோக்கர்ங்க சொன்னப்போ 1/n
வர்றவங்க வரட்டும். இல்லன்னா கீழ் வீட்டுக்கும் முசுலீமே வரட்டும்னு சொல்லிட்டோம். கிட்டத்தட்ட 9 மாசமா கீழ்வீடு காலியாவே இருக்கு ( கொரோனா லாக்டவுனும் ஒரு காரணம்). பெரியப்பா தவறினப்ப அந்த வீட்லதான் self quarantine ல இருந்தேன். 2/n
இப்போ, அப்பாவோட surgery க்கு o+ve blood தேவப்பட்டுச்சு. கடைசி நேரத்துல சொன்னதால நானே கொடுக்கறேன் னு சொன்னேன். Blood relation அதுவும் மகன்லாம் கொடுக்கக்கூடாது. Storage ல இருக்கிறதும் கூடாது. Fresh blood தான் வேணும்னு சொன்னாங்க. Twitterல, whatsappல எல்லாம் request போட்டுட்டு 3/n
Blood bank போய் விசாரிச்சா இது normal blood donation இல்ல. SDP (Single Donor& #39;s Platelet) வேணும்னாங்க. Regularஆ blood donate பண்றவங்ககூட SDP சொன்னதும் தயங்கினாங்க. ஏன்டா முதல்ல Blood test பண்றதுக்கு 45 நிமிடம் அப்புறம் Blood donation க்கு 2 மணிநேரம் ஆகும். 4/n
Donor கிட்ட இருந்து Blood எடுத்து அதுல platelets மட்டும் filter பண்ணி எடுத்துட்டு filter பண்ண blood மறுபடியும் Donor உடம்புக்கே செலுத்தனும். இது மாதிரி 8 - 10 cycle நடக்கும். ஒரு cycle க்கு 15 நிமிசம். நிறைய பேர்கிட்ட பேசிப்பார்த்து கடைசியில ஒருத்தர் வந்தார். 5/n
3 மாசம் முன்னாடிகூட donate பண்ணியிருக்கேன் பயப்படாதீங்க டெஸ்ட்ல reject பண்ணமாட்டாங்கன்னு சிரிச்சுட்டே சொன்னார். 3 மணி நேரத்துக்கு மேல இருந்து donate பண்ணிட்டுப்போனார். எனக்கு எப்படி நன்றி சொல்லன்னுத் தெரியல. கை கொடுத்துட்டுக் கிளம்பிப்போயிட்டார். பெயர் ரியாசுதீன்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏🏽" title="Folded hands (mittlerer Hautton)" aria-label="Emoji: Folded hands (mittlerer Hautton)">