காளையார்கோவிலில் புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் விநாயகர் கோயிலில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் விநாயகர் கோயிலில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் குழுமத்தை சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் கண்டுபிடித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது:& #39;& #39;பாண்டிய நாட்டின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று காளையார்கோவில். இவ்வூர் கானப்பேரயில், தலையிலங்கானம், திருக்கானப்பேர், கானை என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் கோயிலில் செய்யுள் அமைப்புள்ள பாடல் கல்வெட்டு கானப்பேர் என ஊரின் பெயரையும் குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டில் மதுரை, இருக்கன்குடி, சித்தன்னவாசல், ஏர்வாடி போன்ற பகுதிகளில் பாடல் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே கிடைத்துள்ளன. நான்கு வரிகளே இடம் பெற்றுள்ளன.
பாண்டிய நாட்டில் மதுரை, இருக்கன்குடி, சித்தன்னவாசல், ஏர்வாடி போன்ற பகுதிகளில் பாடல் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே கிடைத்துள்ளன. நான்கு வரிகளே இடம் பெற்றுள்ளன.
இந்த கல்வெட்டில் மூன்று வரிகளுடைய எந்த திருமுறைகளிலும் பதிவு செய்யப்படாத தனிப்பாடல் உள்ளது.பாடலின் கருத்துஅருந்தவம் புரியும் முனிவர்களுக்காக சிவபெருமானே கானப்பேரில் உள்ள சுவர்ண காளீஸ்வரர் திருத்தலத்தில் கல்ஆல் மரத்தின் கீழே அமர்ந்து அறங்களை மொழிவதாக கூறப்பட்டுள்ளது.