சின்ன வயசுலலாம் வீட்ல சாமி ரூமோ, சாமியோ அம்மா கும்பிட்டு பார்த்ததில்ல. அப்பாவோட ஊருக்கு போனாலும் இப்ப வரை பலர் வீட்ல சாமி படங்கள்லாம் இருக்காது. குல தெய்வம் தான். அம்மன் கோவில் திருவிழா மட்டும் வருஷத்துக்கு ஒருக்கா விசேஷமா இருக்கும்.
மாமியார் விட்லயும் இப்படியே. ஊருக்கு போனாலும் குல தெய்வ வழிபாடு மட்டும் தான். இப்ப சில வருஷம் முன்னாடி தான் அம்மாவாசைங்குறாங்க, பௌர்ணமிங்குறாங்க, நவமிங்குறாங்க...அம்மா வீட்ல சாமி படங்களும் வந்தது கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான்.
எங்க வீட்ல நண்பர்கள் பரிசா கொடுத்த ரெண்டு சாமி படங்கள் இருக்கும். ஒரு நாளும் கோவிலுக்கு போகனும்ன்னோ சாமி கும்பிடனும்ன்னோ தோணினதில்ல. வரலாற்று கோவில்களுக்கு மட்டும் போறது பிடிக்கும். மகனுக்கும் சின்ன வயசுல இருந்தே சாமி பக்திலாம் இருந்ததில்ல.
ஆனா இப்ப வளர்ந்தப்புறம் சில வருஷமா பொங்கல், தீபாவளி, ஆங்கில வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, கிருஸ்துமஸ், ரம்சான்னு எல்லா விசேஷ நாட்களுக்கும் ஒரு குதூகலம் வந்துரும். எல்லா விழாக்களையும் கொண்டாட்ட மனநிலைக்காக கொண்டாடிட்றதுண்டு :)
இப்படி ஒவ்வொருத்தருக்கும் இங்க பல வழக்கம் இருக்க நம்மளையும் இவங்க லிஸ்ட்ல சேர்க்க நினைக்கிறதும் அதை வெச்சி பிறரை மட்டம் தட்டவும் மாஸ் காட்ட நினைக்கிறதும் கடுப்பைக் கிளப்புது மக்களே :)
Read on Twitter